திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதுவரை 65 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். கரோனா சிகிச்சைக்கு என்று தனிமைப்படுத்தப்பட்ட பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருந்து, உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்குவதற்காக , தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான இரண்டு ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பெற்றுக்கொண்டார்.