தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளை: போலீசார் விசாரணை - திருச்சியில் அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளை

திருச்சி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சுமார் 10 கடைகளில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளை
அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளை

By

Published : Jan 27, 2022, 7:19 PM IST

திருச்சி: கூத்தைப்பார் பேரூராட்சிக்குள்பட்ட பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 100 கடைகள் உள்ளன.

அங்குள்ள சுமார் 10 கடைகளில் நேற்று (ஜன.26) இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பணம், பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளை

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவெறும்பூர் காவல் துறையினர் கொள்ளை நடந்த கடைகளில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திருப்பூரில் 4 நாள்களாக போக்குக் காட்டிய சிறுத்தை பிடிபட்டது!

ABOUT THE AUTHOR

...view details