தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்.எஸ்.பி சாலை, பெரியகடைவீதி, நந்தி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் அமைத்துள்ளனர். மேலும் கூட்டம் காரணமாக தெப்பக்குளம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இன்று திறந்துவைத்தார்.
இந்தப் புறக்காவல் நிலையத்தில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபடவுள்ளனர். இந்த விழாவில் மாநகர துணை ஆணையாளர்கள் மயில்வாகனன், நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் அமல்ராஜ், "லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மூன்று பேர் மட்டுமே நேரடியாக சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று முறை கடைக்கு நகை வாங்குவது போல் வந்து நோட்டமிட்டு சென்று பின் கடையின் சுவற்றில் நான்கு முதல் ஐந்து நாட்களாக சிறிது சிறிதாக உடைத்து துளையிட்டுள்ளனர்.