திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 9, 10ஆவது வார்டுகளுக்கு உட்பட்ட வாகைக்குளம் விஸ்தரிப்பு, வானக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் அளிப்பதில்லை என நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பாக புகாரளிப்பட்டது.
நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்; காலிக்குடங்களுடன் களமிறங்கிய பொதுமக்கள்! - மணப்பாறை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி: முறையாக குடிநீர் வழங்காததது ஏன் எனக் கேள்வி எழுப்பியதற்கு அலட்சியமாக பதிலளித்த மணப்பாறை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதற்கு அரசு அலுவலர்கள் அலட்சியப்போக்குடன் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கோவில்பட்டி - விராலிமலை சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் சமரச பேச்சுவார்த்தையை மக்கள் ஏற்க மறுத்த நிலையில், நகராட்சி அலுவலர்கள் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இந்தச் சாலை மறியலால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.