தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அஞ்சல் தலை கண்காட்சி! - சாலை பாதுகாப்பு

திருச்சி : சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.

திருச்சி செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அஞ்சல் தலை கண்காட்சி

By

Published : Jan 21, 2020, 8:52 PM IST

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி ஒன்றை நடத்தியது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அஞ்சல் தலை கண்காட்சி

இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் பேசுகையில், "ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் சாலைப் பாதுகாப்பை பின்பற்றி நடக்கவேண்டும். நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய பல அடிப்படை போக்குவரத்து விதிகள் உள்ளன. சாலை எச்சரிக்கை குறியீடுகள் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது ஒரே கோட்டில் செல்ல வேண்டும். தேவைப்படும்போது இண்டிகேட்டர்களைப் பயன்படுத்த வேண்டும். ஓட்டுனர் உரிமத்துடன் வாகனம் ஓட்ட வேண்டும்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அஞ்சல் தலை கண்காட்சி

எல் போர்டுகள் பொருத்தி வாகனம் ஓட்டுபவர்களை மிகவும் கவனமாக ஓட்ட எச்சரிக்கலாம். வாகனங்களை வாகனம் நிறுத்தும் இடங்களில் மட்டும் நிறுத்துங்கள். தலைக்கவசம் உயிர் கவசம்” என்று பேசினார்

ABOUT THE AUTHOR

...view details