தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து சாலை மறியல்! - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: மணப்பாறை அருகே குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Road blockade condemning non-supply of drinking water in Manapparai  Road blockade  Road blockade condemning  non-supply of drinking water  குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து சாலை மறியல்  சாலை மறியல்  குடிநீர்  அரசுப் பேருந்தை சிறைபிடிப்பு  திருச்சி மாவட்ட செய்திகள்  Trichy District News
Road blockade condemning

By

Published : Jan 7, 2021, 10:58 AM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது கரும்புளிபட்டி. இங்கு முறையாக குடிநீர் வருவதில்லை என அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலரிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகக் கூறியும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மறியல்

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தையும், ஊராட்சி செயலரையும் கண்டித்து இன்று காலை அவ்வழியே மணப்பாறை நோக்கி சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலைக் கைவிட்டனர்.

பின்னர் அங்கு வந்த ஊராட்சி செயலரை பொதுமக்கள் சுற்றிவளைத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தத் திடீர் சாலை மறியலால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:இருபது நாள்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பொது மக்கள் சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details