திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புத்தூரைச் சேர்ந்தவர், மாணவி வித்யாலட்சுமி(19). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி, வித்யாலட்சுமி தனது தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக பெல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தார்.
விஷ குளிர்பானத்தை கொடுத்து மாணவி கொலை? - பொதுமக்கள் போராட்டம் - trichy girl killed by poison cool drinks
கல்லூரி மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவரை வழிமறித்த மூன்று நபர்கள் விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாகவும், இதனால் தனியார் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தாய் சாந்தி பெல் காவல் நிலையத்தில் கடந்த 18ம் தேதி புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பெல் போலீசார் வழக்கு பதிந்து மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் இறப்புக்கு காரணமான மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பெல் போலீசாரை கண்டித்து உடலை வாங்க மறுத்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.