தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி விபத்து - முதியவர் உயிரிழப்பு - கார் மோதி முதியவர் பலி

திருச்சி: திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மிதிவண்டியில் சென்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

road-accident-in-trichy-to-dindigul-high-way

By

Published : Aug 27, 2019, 6:33 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் மைக்கல்(61). கூலித்தொழிலாளியான இவர், திங்கட்கிழமை இரவு மஞ்சம்பட்டியிலிருந்து மணப்பாறை நோக்கி தனது மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், எதிரே வந்த கார் ஒன்று மிதிவண்டியின் மீது மோதியது. இதில் மைக்கல் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், மைக்கல்லின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கார் ஒட்டுநரை கைது செய்த மணப்பாறை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details