தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கை'ப்பற்றிய குழந்தை... துளிர்த்த நம்பிக்'கை'! - மீட்கும் பணி தீவிரம் - child rescue update

மணிகண்டனின் தனித்துவமான கருவியினை குழந்தை சுஜித் ஒரு கையினால் பற்றியுள்ளார். இது மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது.

rescuமீட்கும் பணி தீவிரம்e operation

By

Published : Oct 25, 2019, 10:16 PM IST

Updated : Oct 26, 2019, 9:57 AM IST

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருக்கும்போது 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மணிகண்டன் கண்டுபிடித்த தனித்துவமான கருவி மூலம் மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கருவியினை சிறுவன் சுஜித் ஒரு கையினால் பற்றியுள்ளார். இது மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது.

மணிகண்டனுடன் இணைந்து நாமக்கல் தீயணைப்புப் படையினரும் மதுரை தீயணைப்புப் படையினர், புதுக்கோட்டை தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்கும் பணி தீவிரம்

நிகழ்விடத்தில் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, உயர் அலுவலர்கள் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த விருப்பமும் குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே!

Last Updated : Oct 26, 2019, 9:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details