மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 52 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பழைய ஆழ்துளைக் கிணற்றின் அருகே புதிதாக ஆழ்துளை அமைக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றுவருகிறது.
புயலாக வேலை செய்து 15 நிமிடங்களில் பழுதை சரிசெய்த மீட்பு பணியாளர்கள்!
திருச்சி: பழைய ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது வேகமாகச் சரி செய்யப்பட்டு மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
Rescue operation resumed
இந்நிலையில், பழைய ரிக் இயந்திரத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய இயந்திரத்தை பொருத்தும் பணிகள் முடிவடையாததால் மீட்புப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.
ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு பழுதை சரி செய்ததால், 15 நிமிடத்தில் பணிகள் மீண்டும் தொடங்கி வேகமாக நடைபெற்றுவருகிறது. மறுபுறம் புதிய இயந்திரத்தை பொருத்தும் பணிகளில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.