திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கல்லக்குடி கே.கே. நகர் பகுதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இன்று அதிகாலை அந்தக் கழிப்பறையின் உள்ளே பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சிடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக குழந்தையை மீட்டு 108 மருத்துவக் குழுவினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
பொது கழிப்பிடத்தில் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு! - கல்லக்குடியில் ஆண்குழந்தை மீட்பு
திருச்சி: கல்லக்குடி கே.கே.நகர் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் வீசப்பட்ட பச்சிளம் ஆண்குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்துவந்த மருத்துவக் குழுவினர், குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து லால்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் யார், குழந்தையை கழிப்பிடத்தில் வீசி விட்டுச் சென்ற நபர் யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பச்சிளம் குழந்தையை கழிப்பிடத்தில் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.