தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சரின் குற்றச்சாட்டு தவறு என நிரூபிக்கத் தயார் - கே.என். நேரு

திருச்சி: தலைமைச் செயலரிடம் திமுக அளித்த மனுக்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம் என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கூறினார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

By

Published : May 29, 2020, 12:30 PM IST

ஊரடங்கால் பாதித்தவர்களின் குறைகளைக் கேட்பதற்காக திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்படாத மனுக்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் திமுகவினர் வழங்கிவருகின்றனர். இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய கே.என். நேரு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட 22 ஆயிரத்து 500 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். அதை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரோனா விவகாரத்தில் தொடக்கத்திலேயே உபகரணங்கள் வாங்குவது, மருத்துவமனையை தயார்செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தால் பிரச்னை அதிகமாகியிருக்காது.

செய்தியாளர்களிடம் பேசும் கே.என். நேரு

தலைமைச் செயலரிடம் திமுக எம்.பி.க்கள் அளித்த மனுக்கள் அனைத்தும் பொய் என அமைச்சர் காமராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். அவை அனைத்தும் உண்மையான மனுக்கள் என நிரூபிக்கத் தயாராக உள்ளோம். கரோனா விவகாரத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை. பல விவகாரங்களை அரசு மறைத்துவருகிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு கால நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details