தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சிக்கு வந்த ரேபிட் கருவி: தொடங்கிய கரோனா பரிசோதனை - தொடங்கிய கரோனா பரிசோதனை

திருச்சி: அரசு தலைமை மருத்துவமனையில் ரேபிட் கருவி மூலம் கரோனா பரிசோதனை தொடங்கியுள்ளது.

rapid
rapid

By

Published : Apr 18, 2020, 4:40 PM IST

Updated : Apr 18, 2020, 7:57 PM IST

கரோனா பரிசோதனையை விரைந்து மேற்கொள்ளும் வகையில் ரேபிட் கருவிகளை சீனாவிலிருந்து மத்திய அரசு வரவழைத்துள்ளது. மொத்தம் 6.5 லட்சம் கருவிகள் இந்தியா வந்துள்ளன. இதை மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கும் பணி தொடங்கியது. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு 24 ஆயிரம் ரேபிட் கருவிகள் நேற்று (ஏப்ரல் 17) அனுப்பிவைக்கப்பட்டன.

சென்னை வந்த இந்தக் கருவிகள் மாவட்ட வாரியாக அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டன. இதில் திருச்சி விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆயிரம் கருவிகள் இன்று வந்தடைந்தன. முதல்கட்டமாக இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா முன்னிலையில் இப்பரிசோதனை நடைபெற்றது. ரேபிட் கருவி மூலம் பரிசோதனை விரைந்து முடிக்கப்பட்டு முடிவுகள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் பொதுமக்களுக்கான பரிசோதனை தொடங்க உள்ளது. எனினும் திருச்சி மக்கள்தொகைக்கு ஏற்ப ஆயிரம் கருவிகள் என்பது போதுமானதாக இல்லை என்று மருத்துவத் துறை வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: 'கரோனாவிலிருந்து பாதுகாத்த மக்களை பசியால் உயிரிழக்கச்செய்து விடக்கூடாது'

Last Updated : Apr 18, 2020, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details