திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், 2012-2017ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் திருச்சி ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சிலைகள், விலை மதிப்புள்ள கலைப் பொருள்களும் களவு போய்விட்டதாகப் புகாரளித்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விவாகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
ஸ்ரீரங்கம் கோயில் சிலைத் திருட்டு: அறநிலையத் துறை அலுவலர் மீது வழக்குப்பதிவு! - ரங்கநாதர் கோயில் சிலைத் திருட்டு வழக்கு
சென்னை: திருச்சி ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் திருடுபோன சிலைகள் தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர் உள்பட ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
statue theft case
இதனடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர் உள்பட ஆறு பேர் மீது சிலைத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர். மேலும், இவ்வழக்கை விசாரிக்கும் அலுவலராக சிலைத் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: காவலன் செயலியை 5 நாட்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்: ஏ.கே.விஸ்வநாதன்