திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான கே.என். நேருவின் தொகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த வகையில் திருச்சி 49ஆவது வார்டுக்குள்பட்ட மதினா பள்ளிவாசல் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் தளம் அமைக்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று வடிகால் தளத்திற்கான திறப்பு விழா நடைபெற்றது.