ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு இன்று மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐஓபிசி ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கோட்ட செயலாளர் மீரான் தலைமை வகித்தார்.
தனியார்மயத்தை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - Southern Railway Trichy Divisional Manager
திருச்சி: ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ரயில்வேயில் தனியாரை அனுமதிக்கக்கூடாது, தனியார் ரயில்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அப்ரண்டீஸ் முடித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி வழங்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு நிலுவையுள்ள அகவிலைப்படி மற்றும் போனஸ் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையும் படிங்க:ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க டெண்டர் அறிவிப்பு - எம்.பி வெங்கடேசன் கண்டனம்