தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.வி.சிந்துவின் பள்ளி கால ஆசை? திருச்சி நிகழ்ச்சியில் ஓப்பன் டாக்! - Meet the champion

திருச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற "Meet The Champion" விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி‌.சிந்து பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

PV Sindhu participates in the 'Meet the champion' program held at a private school in Trichy
திருச்சியில் பி.வி.சிந்து..! தனியார் பள்ளியில் நடைபெற்ற 'Meet the champion' நிகழ்ச்சியில் பங்கேற்பு

By

Published : Jan 28, 2023, 6:56 PM IST

திருச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற "Meet The Champion" விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி‌.சிந்து பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

திருச்சியில் உள்ள (கேர் இன்டர்நேஷனல் பள்ளி ) என்ற தனியார் பள்ளியில் பேட்மிண்டன் வீராங்கனை பத்மபூஷன் பி.வி சிந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவர்கள் மத்தியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, “உங்களது குழந்தைகள் விரும்பும் விளையாட்டைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பெற்றோர்கள் உங்களது குழந்தைகள் எதில் ஆர்வமாக உள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு உந்துதலை அளியுங்கள்.

வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படுவது இயல்பு. சிலர் சின்ன வயதில் வெற்றி பெறுவார்கள், ஆனால் அது முக்கியமல்ல, வெற்றி பெறுகிறோம் என்பதே முக்கியம். நிறைய நேரங்களில் நான் தோல்வி அடைந்த போதும் எனது பெற்றோர்கள் எனக்குத் தட்டிக் கொடுத்து என்னை ஊக்கப் படுத்தினார்கள். படிப்படியாகத் தான் முன்னேறினேன். விருதுகள், சான்றிதழ்கள் எல்லாம் படிப்படியாகத் தான் கிடைத்தது.

இங்கு எண்ணற்ற சாதனையாளர்கள் இருக்கலாம். எண்ணற்ற பி.வி.சிந்துக்கள் இருக்கலாம் அவர்களைக் கண்டறிந்து வெளி கொண்டு வரும் முக்கிய பொறுப்பு கண்டிப்பாக ஆசிரியர்களுக்கு உண்டு. நாள்தோறும் காலை, மாலை 27 கிலோ மீட்டர் பயிற்சிக்காக நான் பயணித்து வீடு திரும்புவேன். நான் என் மனதில் எண்ணிக் கொண்டதெல்லாம் நம்மால் ஏன் முடியாது தங்க பதக்கத்தை வெல்ல முடியும் என்ற மனஉறுதி.

3 மாதம் போன்களை பயன்படுத்தாமல் இருந்தேன். 3 மாத காலம் எந்த ஒரு துரித உணவுகளையும் சாப்பிடாமல் இருந்தேன். இந்தியாவிற்காக மேடையில் நிற்கும் போது எப்போதும் மகிழ்ச்சி அடைவேன். சில்வர் சிந்து என்று எனக்குப் பலர் பெயரே வைத்து விட்டார்கள். அவர்கள் பேச்சைப் பொருட்படுத்தாமல் நான் தங்க பதக்கத்தை வெல்வது எப்படி என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.

7 முறை தோற்ற பின்னர் டிசம்பரில் மீண்டும் வெற்றி பெற்றேன் சேம்பியன்ஷிப் வென்றேன். என்னுடைய வாழ்வில் நான் கற்று கொண்டது தோல்விகளின் போது நாம் என்ன கற்றுக்கொள்ளுகிறேன் என்பதே. தங்க பதக்கம் வெல்ல கடிமான பாதை கடந்து வந்தேன். எல்லாம் உடனே நியாபகம் இல்லை ஆனால் என்னுடைய வாழ்வில் உண்மையில் எண்ணற்ற கடினமான சூழலை சந்தித்தேன். நான் சாதாரண நடுத்தர குடும்ப பின்னணியைச் சேர்ந்தவள்” என்றார்.

பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த பி.வி சிந்து, “என்னுடைய இஸ்பைரேசன் பேட்மிண்டன் வீரர் லிண்டன். முதலில் சிறுவயதில் எனக்கு மருத்துவராக வேண்டும் என்கிற கனவுதான் இருந்தது. பின்னர் தான் பேட்மிண்டன் மீது ஆர்வம் வந்தது என்றார். கடினமான நேரத்தில் எப்படி மனதை திடப்படுத்துவீர்கள் என்கிற கேள்விக்கு, களத்தில் சிரமமான நேரங்களில் இந்த அளவிற்கு நாம் வளர எவ்வளவு சிரமம் அடைந்தோம், எவ்வளவு பயிற்சி, எவ்வளவு கிலோ மீட்டர் பயணம், இதை தான் என்றும் என்னுவேன். வெற்றி தோல்விகளைக் கண்டு மனதை மாற்றிக் கொள்ள மாட்டேன்.

ஒழுக்கம் என்பது மிக முக்கியம். அதே போல் இலக்கு என்பதும் மிக மிக முக்கியம். கல்வி, விளையாட்டு இரண்டுமே முக்கியம் தான். விளையாட்டை விரும்பும் போது கல்வி பெரிதல்ல என்று கூறுவது தவறு. கல்வி உங்களை மீண்டும் புத்துணர்வாக மாற்ற உதவும். கல்வியும் முக்கியம் என்பதை விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள குழந்தைகள் மறந்து விடக்கூடாது. யோகா போன்ற பயிற்சிகளைக் கண்டிப்பாக மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என பிவி சிந்து தெரிவித்தார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.

இதையும் படிங்க: அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details