பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர் சித்தாந்த் சிங். (24 ). இவர் திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 35ஆம் ஆண்டு எல்.எல்.பி படித்துவந்தார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், சட்ட பல்கலைக்கழகத்திற்கும் விடுமுறை விடப்பட்டு விடுதிகள் மூடப்பட்டது.
இதனால், சித்தாந்த் சிங் கல்லூரி விடுதியிலிருந்து இருந்து வெளியேறி திருச்சி மன்னார்புரம் நடுத்தெருவில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள அறையை வாடகைக்கு எடுத்து கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் தங்கியிருந்தார்.
இந்நிலையில் இவர், கடந்த இரண்டு நாள்களாக அறையிலிருந்து வெளியே வரவில்லை. அறையின் கதவும் உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, துர்நாற்றம் வீசியுள்ளதால், காவல் துறையினருக்கு தகவலளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், கதைவை உடைத்து உள்ளே சென்றபோது, சித்தாந்த் சிங் முகம் பிளாஸ்டிக் கவரினால் மூடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் அவர் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரது உடலை காவல் துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து பஞ்சாப்பில் உள்ள பெற்றோருக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்தனர்.
சித்தாந்த் சிங் மாரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஊரடங்கு காரணமாக திருச்சியில் முடங்கியிருந்த சித்தாந்த் சிங் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா? என்ற ரீதியிலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.