திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த போடுவார்பட்டிக்கு உட்பட்ட குளம் மற்றும் அங்கிருந்து பூங்குடிப்பட்டி குளத்திற்கு செல்லும் வாய்க்கால்களை தனிநபர்கள் சிலர் நீண்ட காலங்காலாக ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
இதை அகற்றி தரக்கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும், அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் சிலர் மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து பொதுமக்கள் பேரணியாக சென்று துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.