திருச்சி: மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளையைச் சேர்ந்த கோவிந்தன் மகன் மாரியப்பன் (40). இவர் அதே பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடிநீரை திறந்துவிடும் வேலையை தனக்கு வழங்கும்படி, ஊராட்சி மன்ற நிர்வாகிகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜூன்.19) மாலை அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏறி நின்று, தனக்கு வேலை தரவில்லை என்றால் குடிநீரில் விஷம் கலந்துவிடுவேன் என குடிபோதையில் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த பொது மக்கள், நடந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.