தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும், 10 விழுக்காட்டுக்கும் மேல் பணியாற்றும் வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தமிழ் தேசிய இயக்கம் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டம் - மத்திய அரசு நிறுவனங்களில் பணி
திருச்சி: மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு பணி வழங்கக்கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டம்
அந்த வகையில் இன்று (செப்டம்பர் 11) முதல் நாள் போராட்டம் தொடங்கியது. இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு தொடர் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.