குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே, மாவட்ட தலைவர் உதுமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இதில், எஸ்டிபிஐ கட்சி ஹஸன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.