தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்தில் செய்தியாளர் உயிரிழப்பு - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில், செய்தித்தாள் செய்தியாளர் உயிரிழந்தனர்.

தனியார் செய்தித்தாள் செய்தியாளர் உயிரிழப்பு
தனியார் செய்தித்தாள் செய்தியாளர் உயிரிழப்பு

By

Published : Oct 7, 2021, 10:04 PM IST

திருச்சி: தினமணி செய்தியாளராகப் பணியாற்றி வந்தவர், கோபி (38). இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு. இவருக்குத் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். திருச்சியில் உள்ள மேன்ஷனில் தங்கிப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று (அக்.7) அவருக்கு வார விடுமுறை. இதையொட்டி நண்பருடன் காரில் வெளியில் சென்றுள்ளார். பின்னர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார்.

தினமணி செய்தியாளர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்த கோபியும், அவரது நண்பரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சிறுகனூர் காவல் துறையினர் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கனிம வளம் கொள்ளை - சமூக ஆர்வலர்கள் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details