திருச்சி: மணப்பாறையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, புதுக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் டயர், கூவம்பட்டி என்னுமிடத்தில் ’கரகாட்டக்காரன்’ திரைப்பட பாணியில் கழன்று ஓடியது.
நடுவழியில் கழன்று ஓடிய பேருந்து டயர்... சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்! - private bus driver
நடுவழியில் பேருந்தின் டயர் கழன்று ஓடிய நிலையில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கழன்று ஓடிய பேருந்தின் டயர்
இதனைக் கண்டதும் சுதாரித்த பேருந்து ஓட்டுநர், உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார். ஓட்டுநரின் இந்த சாமர்த்திய செயலால் பேருந்தில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். பெரும் விபத்திலிருந்து சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இதையும் படிங்க: வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்று சந்தேகத்தைக் கிளப்பிய கார்: போலீசார் தீவிர விசாரணை