திருச்சிமாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்து வந்த சிவராசு, கோயம்புத்தூர் வணிகவரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக பிரதீப் குமார் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய மாவட்ட ஆட்சியருக்கு அரசு அதிகாரிகள், ஆட்சியராக அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், "மக்கள் குறைதீர் கூட்டத்தில் வரும் மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, குடிநீர், சாலை வசதி மேம்பாடு மற்றும் தெருவிளக்குகள் சிறப்பான முறையில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றவர் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் மோசமானதை அடுத்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்வேன்.