தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்க மங்கை கோமதிக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு! - அஞ்சல்தலை

திருச்சி: ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு இந்திய அஞ்சல்துறையின் 'மை ஸ்டாம்ப்' திட்டத்தின் மூலம் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

திருச்சி

By

Published : May 1, 2019, 5:27 PM IST

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியின் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதித்தார். திருச்சி மாவட்டம் முடிகண்டத்தை சேர்ந்த கோமதியின் வெற்றி பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கும் எழுச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளாக அனைவரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பு அஞ்சல்தலை கோமதியிடம் வழங்கப்பட்டது

இந்நிலையில், திருச்சியை சேர்ந்த அஞ்சல்தலை சேகரிப்பாளர் விஜயகுமார், ரகுபதி, லால்குடி விஜயகுமார் ஆகியோர் இந்திய அஞ்சல்துறையின் 'மை ஸ்டாம்ப்' திட்டத்தின் மூலம் அஞ்சல்தலையை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அந்த அஞ்சல்தலையில் தங்க மங்கை கோமதி தங்கப்பதக்கத்துடன் இருக்கும் புகைப்படமும், டெல்லி செங்கோட்டையின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த அஞ்சல்தலை கோமதியின் இல்லத்திற்கு சென்று அவர்கள் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details