ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9 முதல் 15ஆம் தேதி வரை அஞ்சல்துறை வாரமாகக் கொண்டாடப்படுகிறது. உலக அஞ்சல் தின வாரம் திருச்சி தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் சுமதி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மணிசங்கர், தேசிய கல்லூரி முதல்வர் சுந்தர்ராமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மத்திய மண்டல அஞ்சல் துறை உதவி இயக்குநர் சாந்தலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். இயக்குநர் தாமஸ் லூர்து ராஜ் சிறப்புரையாற்றினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக 140 ஆண்டுகளைக் கடந்த அஞ்சல் அட்டையின் சிறப்பு அஞ்சல் உறையினை அஞ்சல்துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் வெளியிட ஹாபீஸ் அறக்கட்டளை நிறுவனர் மதன் பெற்றுக்கொண்டார்.