தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி - பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய வாய்ப்பு!

திருச்சி: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைய வாய்ப்பு
ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைய வாய்ப்பு

By

Published : May 19, 2021, 8:25 PM IST

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் எடமலைப்பட்டி புதூர் அருகே பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கான இடம், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் அதிமுக ஆட்சி அமைந்தது. திமுக தேர்வு செய்த பஞ்சப்பூர் இடத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க அதிமுக ஆட்சியில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய வாய்ப்பு

தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ளது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பஞ்சப்பூரில் மீண்டும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று (மே.19) திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ள இடத்தை அவர் ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலர்கள் வரைபடம் மூலம் அவருக்கு விளக்கம் அளித்தனர்.

இதையும் படிங்க:மதுரை வீரனுக்கு தடுப்பூசி

ABOUT THE AUTHOR

...view details