திருச்சி: பொதுமக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு முழுக் கரும்புடன் கூடிய 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கிவருகிறது. தமிழ்நாடு அரசு கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யுமாறு அறிவித்துள்ளது.
கரும்பு ஒன்று ரூ.15 முதல் ரூ.16 வரை மட்டுமே இடைதரகர்கள் கேட்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கரும்பு ஒன்றுக்கு ரூ.16 வரை செலவு செய்து விளைவித்த நிலையில், அதே விலைக்கு கேட்பது எந்த வகையில் நியாயம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, திருவளர்ச்சோலை பகுதியில் கரும்பு விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகளை வெட்டி விற்பனைக்கு கொண்டு செல்லும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.