புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுகவின் ஒற்றைத் தலைமை அமித் ஷாதான் என்று கூறிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தனது கருத்தை திரும்பப் பெறவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
'திமுக எம்.பி.க்கள் தங்களின் சொத்தை விற்றாவது இதனை செய்க!' பொன். ராதாவின் பலே யோசனை!
திருச்சி: தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற 37 மக்களவை உறுப்பினர்களும் தங்களின் சொத்துகளை விற்றாவது, விவசாயக் கடன், கல்விக்கடன் முதலியவற்றை அடைக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிட்டுள்ள நிலையில் தேர்தல் முடிவு என்று வரும்போது ஒருவர் தலையின் மீது மட்டும் குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல என்று கூறிய அவர், தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று அதிமுக நிர்வாகிகள் யாரும் கூறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற 37 மக்களவை உறுப்பினர்களும் தங்களின் சொத்துகளை விற்றாவது தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன், கல்விக்கடன் முதலியவற்றை அடைக்க முன்வர வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.