திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே 16 வயது சிறுமி, கடந்த 8 நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரது பெற்றோர், சிறுமியை அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்நிலையில் எட்டு நாட்களாகியும் மாயமான சிறுமியை காவல் துறையினர் கண்டுபிடிக்கவில்லை.
மாயமான சிறுமியை மீட்காததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டம் - police station siege
திருச்சி: மாயமான சிறுமியை கண்டுபிடித்து தராததால் அவரது பெற்றோர், உறவினர்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
காவல் நிலையம் முற்றுகை
இதனால் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோருடன் இணைந்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் சிறுமி மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'உ.பி.யில் ஆறு வயது சிறுமி கொடூரக் கொலை'- தம்பதி உள்பட நால்வர் கைது