திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள ராஜாளிப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ராம்கி (22). இவர் தனது மாமா வீட்டில் கூலி வேலை செய்துவருகிறார். இவர் கவரப்பட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய தனது உறவுக்காரப் பெண்ணை காதலிப்பதாகக் கூறி கடந்த ஓராண்டிற்கும் மேலாக அவ்வப்போது அப்பெண்ணுடன் தனிமையில் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
மணப்பாறை அருகே மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வலைவீச்சு! - minor girl pregnant
திருச்சி: மணப்பாறை அருகே மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞரைக் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
![மணப்பாறை அருகே மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வலைவீச்சு! மணப்பாறை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7409655-156-7409655-1590864340973.jpg)
மணப்பாறை
இதனால் கர்ப்பம் தரித்த அப்பெண், ஐந்து மாத கருவுடன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞர் ராம்கியிடம் வற்புறுத்தியுள்ளார். இதனை ராம்கி ஏற்க மறுத்த நிலையில், தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து தன்னை ஏமாற்றிய ராம்கி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மைனர் பெண்ணின் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.