தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக்கில் பழச்சாறுடன் சென்ற இளைஞர்கள்: சாராய ஊறலுக்காக எடுத்துச் செல்லப்பட்டதா? - திருச்சி காவல் துறையினர்

திருச்சி: மணப்பாறை அருகே பழச்சாறுடன் சோதனைச்சாவடியை கடக்க முயன்ற இளைஞர்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினர், சாராய ஊறலுக்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருச்சி: மணப்பாறை அருகே பழச்சாறுடன் சோதனைச்சாவடியை கடக்க முயன்ற இளைஞர்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினர், சாராய ஊறலுக்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி: மணப்பாறை அருகே பழச்சாறுடன் சோதனைச்சாவடியை கடக்க முயன்ற இளைஞர்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினர், சாராய ஊறலுக்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By

Published : Jun 2, 2021, 12:05 PM IST

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கள்ளச்சாராயம், பழச்சாறு ஊறல் ஆகியவை தயாரித்து விற்பனை செய்துவருவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், புத்தாநத்தம் அருகேவுள்ள சமத்துவபுரம் பகுதியில் நேற்று (ஜூன் 01) மாலை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே புத்தாநத்தம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆய்வுசெய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் வாட்டர் பாட்டிலில் பழச்சாறு இருந்ததைக் கண்டறிந்தனர்.

மணப்பாறை அருகே பழச்சாறுடன் சோதனைச்சாவடியை கடக்க முயன்ற இளைஞர்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினர்

பழச்சாறு, சாராய ஊறல் போடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள, அவர்களிடம் காவல் துறையினர் கேள்வி கேட்கத் தொடங்கினர். பழச்சாறு எதற்காகக் கொண்டுசெல்கிறீர்கள்? சாராய ஊறல் எங்கே இருக்கிறது எனக் கேள்வி கேட்டனர்.

அதற்கு இளைஞர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல்செய்தனர். இதனையடுத்து, அந்த இளைஞர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details