தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு: போலீஸ் விசாரணை! - பணம் திருட்டு

திருச்சி: மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு: போலீஸ் விசாரணை!
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு: போலீஸ் விசாரணை!

By

Published : May 7, 2021, 2:59 PM IST

Updated : May 7, 2021, 3:38 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வெள்ளக்கல் வீராச்சி தெற்குத்தெருவில் வசித்து வருபவர் லாரி ஓட்டுநர் வீராச்சாமி மகன் விஜயக்குமார்.

இவர் விடத்திலாம்பட்டியில் உள்ள தனது தோட்டத்தை விற்பனை செய்வதற்காக இன்று (மே 7) மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தனது இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இருச்சக்கர வாகனத்தில் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துவிட்டு, அலுவலகத்திற்குள் சென்று பத்திரப்பதிவுகள் முடித்துவிட்டு வந்து பார்த்தபோது இருச்சக்கர வாகனத்தில் இருந்த பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பான புகாரின் பேரில் மணப்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Last Updated : May 7, 2021, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details