தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் கொடிகட்டி பறக்கும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை.. காவல்துறை நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர்

திருச்சியில் கேரளாவின் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை கொடிகட்டி பறந்த நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார் லாட்டரி விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்தனர்.

Police arrested four people for selling a one number lottery in Trichy on the orders of the police Commissioner
காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

By

Published : Apr 28, 2023, 3:44 PM IST

காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

திருச்சி:செந்தண்ணீர்புரம் பகுதி குடியிருப்புக்குப் பின்புறம் உள்ள காசியா பிள்ளை காலனி பகுதியில் கேரள மாநில ஒரு நம்பர் லாட்டரி சர்வ சாதாரணமாக அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு குழுவாக அமர்ந்து பத்து பேர் காகிதத்தில் நம்பர்களை எழுதுவார்கள். இப்பகுதிக்கு தினமும் கூலி வேலை செய்து ஊதியம் வாங்குபவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் காலை 11 மணிக்கு மேல் மூன்று மணிக்குள் நேரடியாக வந்து பணத்தைக் கட்டி, நம்பரை குறிப்பிட்டு சொல்லிவிட்டு செல்வார்.

சிலர் இவர்களை கைபேசி எண்ணில் அழைத்தும் நம்பர்களை பதிவு செய்து கொள்வார்கள். அதற்கு Gpay வாயிலாகப் பணமும் செலுத்தி விடுகிறார்கள். இவர்களுடைய கைபேசி எண்ணையும் அவர்கள் பதிவு செய்து கொள்வார்கள். இந்த ஒரு நம்பர் லாட்டரிக்கான முடிவுகள் மதியம் மூன்று மணிக்கு கேரள மாநிலத்தில் இருந்து இணையதளம் வாயிலாக வெளியிடப்படும். லாட்டரி முடிவுகள் அங்குள்ள தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்படுகிறது. இங்கு லாட்டரிகளை வாங்கியவர்களுக்கு முடிவுகளை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த லாட்டரி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்று இலக்கம் இருந்தால் அதில் ஐந்து இலக்கம் எண்ணை குறிப்பிட்டு அந்த எண் முடிவு வாயிலாக வந்தால் வெற்றி பெற்றவருக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசு தொகையும், மேலும் அதில் இரண்டு லட்சம், 25 ஆயிரம் ரூபாய், நூறு ரூபாய், 50 ரூபாய் எனப் பல்வேறு பரிசு தொகைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த ஒரு நம்பர் லாட்டரி சீட்டின் விலை ஐந்து ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இப்பகுதியில் அமோகமாக நடைபெறும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா உத்தரவின் பெயரில் பாலக்கரை காவல் நிலைய போலீசார், தனிப்படை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு நம்பர் லாட்டரி விற்ற மணிகண்டன், கருப்பையா, பூபதி, செல்வம் ஆகிய நான்கு பேரை அடையாளம் கண்டு மூன்று மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்

முன்னதாக ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்யும் இளையராஜா என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சிறையில் உள்ளார். தற்போது அவருடைய (மச்சான்) உறவினர் செல்வம் இதில் கைதாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து திருச்சி மாநகர ஆணையர், “ இந்த ஒரு நம்பர் லாட்டரி விற்பனை முழுவதும் தடை செய்யப்படும். வெளிமாநில லாட்டரி விற்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன்!

ABOUT THE AUTHOR

...view details