தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்றது.இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இதில் திருச்சி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 919 மாணவர்கள், 18 ஆயிரத்து 563 மாணவிகள், என மொத்தம் 34 ஆயிரத்து 482 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவு விபரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.
இதில் திருச்சி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 440 மாணவர்களும், 17 ஆயிரத்து 820 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 260 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 90.71 சதவீதமும், மாணவிகள் 96 சதவீதமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 93.56 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன்மூலம் மாநில அளவில் திருச்சி மாவட்டம் பிளஸ் டூ தேர்ச்சியில் 13வது இடத்தை பிடித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.29 சதவீத மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் டூ தேர்வு முடிவு: திருச்சி மாவட்டம் 93.56℅ தேர்ச்சி!