திருச்சி: ராம்ஜி நகர் அருகே காவல் துறையினர் வாகன சோதனை செய்தபோது, திருப்பத்தூர் அண்ணாநகர் பொம்மி குப்பத்தைச் சேர்ந்த மாது (65), முருகன் (43) என்கிற இருவர் காரில் 20 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். திருச்சியில் உள்ள யாருக்கும் இந்த கஞ்சாவை வழங்க வந்தார்களா...?, இவர்களுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது...? என்கிற கோணத்தில் ராம்ஜிநகர் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
20 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
திருச்சி அருகே 20 கிலோ கஞ்சா கடத்திய இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் தொடர்ந்து கஞ்சா கும்பல் சிக்குவது காவல் துறையினரை கதிகலங்க வைத்துள்ளது. பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு காரணம் மதுபோதையும் கஞ்சாவும்தான் என காவல் துறையினரே கண்ணை கசக்குகின்றனர். திருச்சியில் ராம்ஜி நகரில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் அதிகம் விற்பனை செய்யும் களமாகவே உள்ளது. தொடர்ந்து இந்தப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கு மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை கடத்திய தந்தை உட்பட 9 பேர் கைது