திருச்சி:மணப்பாறை அருகே தன் காதலனுடன் சேர்த்து வைக்கச் சொல்லி கர்ப்பிணிப் பெண் தன் காதலனின் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். 9 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இவரது காதலர் வேறொரு திருமணம் செய்ய முயன்றதையறிந்த பின் காவல்துறையிடன் புகார் அளித்து அதைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தன் காதலனால் 9 மாத கர்ப்பிணியான இவர், இன்று (மே 7) தன் காதலர் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தினார். அவர், மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த சித்ரா(29) ஆவார். சித்ரா, மணப்பாறையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, இவருக்கு பொம்மன்பட்டியைச் சேர்ந்த அன்பரசன் (எ) ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு 9 ஆண்டு காலமாக காதலித்தும் வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் காதல்முற்றி பல சமயம் தனிமையிலும் இருந்து வந்துள்ளனர்.