திருச்சி: மருங்காபுரி தெற்கு ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள 65 இடங்களில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான ஆர். சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், இதுகுறித்து முன்கூட்டியே தகவலறிந்த யாகபுரம் கிராம மக்கள், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சந்திரசேகர் செல்லும் சாலையில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், ”பத்து ஆண்டுகளாக பதவியில் இருந்தபோது குறைகளைக் கேட்க எங்கள் பகுதிக்கு இவர் வந்ததே இல்லை. குடிநீர் வசதிக்காக ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தரை நீர்த்தொட்டி, ஐந்து மினி சின்டெக்ஸ் டேங்குகள் இருந்தும் குடிநீர் எங்களுக்கு கிடைப்பதில்லை" என வேதனைத் தெரிவித்தனர்.