திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து வீரப்பூர் செல்லும் நகரப் பேருந்து முறையாக வருவதில்லை எனத் தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீரப்பூர் பகுதியில் பொதுமக்கள் பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு பேருந்து தினமும் சரியாக வந்து சென்றது. இந்நிலையில் மீண்டும் கடந்த பத்து நாள்களாக பேருந்து கால தாமதமாக வந்தது. இதனால் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நகரப் பேருந்தை சிறைப்பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.