திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுவது தவறு. தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன' என்றார்.
தொடர்ந்து, 'சமீபத்தில் நடந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. நலத்திட்ட உதவிகள் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இல்லை' எனக் கூறினார்.
People have decided the AIADMK's victory in the local elections, says Minister Vellamandi Natarajan, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நம்பிக்கை மேலும், 'உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு நூறு விழுக்காடு வெற்றியை அளிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்' என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாஃபா மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் - திமுக