தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல வணிக வளாகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை - பிரபல வணிக வளாகம்

திருச்சி: பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான வணிக வளாகம், உணவகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறையினர் சோதனை

By

Published : Jun 6, 2019, 6:39 PM IST

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான பிரபல வணிக வளாகம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த வணிக வளாகத்தில் ரெடிமேட் பிரிவு, ஜுவல்லரி பிரிவு, மளிகைப் பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்த வணிக வளாகத்தில் பத்திற்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

பிரபல வணிக வளாகம்

வருமான வரித் துறை அலுவலர்கள் சோதனை நடத்தியதால், வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அனைவரும் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர். அதேபோல் அந்த வணிக வளாகத்திற்கு சொந்தமான உணவகத்திலும் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்தச் சோதனை அந்தப் பகுதியில் உள்ள சக வரத்தகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல வணிக வளாகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை

ABOUT THE AUTHOR

...view details