திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழப்புதூர், குருவிக்காரன் ஆகியப் பகுதிகளில் வீட்டின் முன்பு கூண்டு அமைத்து பச்சைக் கிளிகள் மற்றும் முனியாஸ் குருவிகள் வளர்த்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் நாகையா தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். வீடுகளின் முன்பு விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வந்த 400க்கும் மேற்பட்ட பச்சைக் கிளிகள், 100க்கும் மேற்பட்ட முனியாஸ் குருவிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தக்குருவிகள் மற்றும் பச்சை கிளிகள் அனைத்தும் வனப்பகுதியில் வளர்வது, எனவே, இதுபோன்று வீடுகளில் வளர்ப்பது சட்டவிரோதமாகும். அந்த வகையில் மார்ச் மாதம் மீட்கப்பட்ட பச்சைக் கிளிகள் அனைத்தும் வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.