தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உற்சவம் கோலாகலம் - Pakalpatu Utsavam begins at Srirangam

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் வைகுண்ட ஏகாதசி 7ஆம் நாள் விழாவில் நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உற்சவம் விழா நடைபெறுகிறது
ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உற்சவம் விழா நடைபெறுகிறது

By

Published : Dec 29, 2022, 5:51 PM IST

ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உற்சவம் விழா நடைபெறுகிறது

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

கடந்த 22ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கி பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பிரகாரங்களில் வீதி உலாவரும் நம்பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சேவித்து வழிபாடு செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து விழாவின் 7ஆம் திருநாளான இன்று சுக்கிரனுக்கு அதிபதியான நம்பெருமாள்(உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ரத்தின நீள்முடி கிரீடம், வெண்பட்டு, ரத்தின அபயஹஸ்தம், முத்துசரம் அடுக்கு பதக்கங்கள் மற்றும் காதுகாப்பு உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி
மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளினார்.

பின்னர் ராமானுஜர், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் தொடர்ந்துவர வழியெங்கும் அரையர்கள் சேவையின் போது திருமொழி பாசுரங்களை கேட்டருளி, பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்து வருகிறார்.

அர்ச்சுன மண்டபத்தில் பெருந்திரளான பக்தர்கள் வரிசையில் நின்று பூலோக வைகுண்ட பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு வணங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க:குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details