தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வெங்காயத்தால் பாஜக ஆட்சிக்கு ஆபத்து' - அக்கறைப்பட்ட திருநாவுக்கரசர் - உள்ளாட்சித் தேர்தல் குறித்து திருநாவுக்கரசர்

திருச்சி: வெங்காய விலை ஏற்றம் பாஜகவின் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

thirunavukkarsu press meet
thirunavukkarsu press meet

By

Published : Dec 6, 2019, 5:55 PM IST

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும். திமுக தேர்தலை நிறுத்த முயற்சிக்கவில்லை. முறைப்படி நடத்த வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறது. உள்ளாட்சித் தேர்தல் எப்படியாவது நடந்துதான் ஆக வேண்டும்.

ஒரு காலத்தில் வெங்காய விலைதான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சி மாற்றத்திற்கான அடிக்கல்லை உருவாக்கும் நிகழ்வாக வெங்காய விலையேற்றம் இருக்கும். நிர்மலா சீதாராமன் என்ன சாப்பிடுகிறார் என்பது நாட்டு மக்களுக்கு முக்கியமல்ல. இதே போன்ற பேச்சை நிர்மலா சீதாராமன் தவிர்த்திருக்க வேண்டும். இதற்காக அவர் குடும்பத்தை, சாதியைப் பற்றி பேச நான் விரும்பவில்லை" என்றார்.

திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு

மேலும், தெலங்கானா பாலியல் கொலை குற்றவாளிகளுக்கு சட்டப்படி தூக்கு தண்டனை வரை கொடுக்கலாம் என்றும்; ஆனால் என்கவுன்டர் என்பது ஏற்புடையதல்ல என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய உச்சத்தில் வெங்காய விலை!

ABOUT THE AUTHOR

...view details