தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முட்புதரில் வீசப்பட்ட குழந்தை- மீட்ட காவல் துறையினர் - one year old baby girl thrown near thuvarankurichi

திருச்சி: துவரங்குறிச்சி காவல் நிலையம் அருகே முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தையை காவல் துறையினர் உயிருடன் மீட்டனர்.

one year old baby girl thrown near thuvarankurichi
one year old baby girl thrown near thuvarankurichi

By

Published : Jul 7, 2020, 7:35 PM IST

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு வயதுடைய பெண் குழந்தை அழுதபடி கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த குழந்தையை மீட்டனர்.

முட்கள் குத்தியதால் காயத்துடன் இருந்த அந்த குழந்தைக்கு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அந்தக் குழந்தையை மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டுசென்றனர்.

இதையடுத்து மருத்துவர் சுரேஷ் குமார் குழந்தையை பரிசோதனை செய்து எக்ஸ்ரே எடுத்து, தடுப்பு ஊசி போட்டு முழு பரிசோதனை செய்தப் பின்னர் திருச்சி குழந்தை நல மையத்திற்கு அனுப்பிவைத்தனர். இந்தக் குழந்தையை காட்டுப் பகுதியில் வீசிச் சென்றது யார் என துவரங்குறிச்சி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதையும் படிங்க... கேரளாவில் தந்தையால் தாக்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details