தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் மூதாட்டியை அடித்து கொன்றவர் கைது - Trichy district

திருச்சி: குடிபோதையில் மூதாட்டியை அடித்துக் கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

one person arrested for killing old women in Trichy
one person arrested for killing old women in Trichy

By

Published : Sep 8, 2020, 6:14 AM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி கோவண்டா குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள்(75). இவரது கணவர் கனகசபை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரே மகள் சிவகாமி. அவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். இதனால் ஆதரவு இன்றி பழனியம்மாள் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி (57) என்பவர் குடிபோதையில் சென்று பழனியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். மேலும், அங்கிருந்த கட்டையை எடுத்து அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தோணி சாமியை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details