இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாட்டில் இதுவரை 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 681 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இதன் தாக்கம் வேகமாக பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனேவே திருச்சி மாவட்டத்தில் இதுவரை 50 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 38 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தவிர வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிலரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் 13 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.