திருச்சி:மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு தத்தமங்கலத்தைச்சேர்ந்தவர், நித்யா. திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் வெற்றிச்செல்வன். இவர் அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம், 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்தப் பணத்தை குணசேகரன் கேட்டதற்கு வெற்றிச்செல்வன் பணத்தை தராமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை ஆதாரப்பூர்வமாக பதிவு செய்ய நினைத்த குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்கள், வெற்றிச்செல்வனின் வீட்டிற்குச் சென்று பணம் கேட்டுள்ளனர்.
அப்போது, குடிபோதையில் இருந்த வெற்றிச்செல்வன், கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு, குணசேகரனின் சகோதரர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்ட முயன்றிருக்கிறார். இந்நிலையில் திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வன் அரிவாளால் வெட்ட துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாங்கிய பணத்தை திருப்பிக்கேட்ட சகோதரர்கள் - ஓட ஓட அரிவாளால் வெட்டதுரத்திய திமுக கவுன்சிலரின் கணவர்! இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்தப்புகாரின் பேரில் சிறுகனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது வெற்றிச்செல்வனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க:சிறுமியை ஏமாற்றிப்பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!