திருச்சி: மணப்பாறை அடுத்த அர்ணாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரின் பத்து மாத குழந்தை கனியமுது கழுத்தில் அணிந்திருந்த இரண்டு கிராம் எடையுள்ள தங்க தாயத்து நேற்று (டிசம்பர். 30) காணாமல் போனது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர். 28) மாலை வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை, டவுன் பழனிச்சாமி என்பவர் தூக்கி வைத்திருந்தது பெற்றோருக்கு ஞாபகம் வந்தது. உடனே அவர் வீட்டிற்கு சென்ற ராமச்சந்திரன், தாயத்தை திரும்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து சங்கிலியை தர மறுத்துள்ளார். இதனால் ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மணப்பாறை காவல் துறையினர், பழனிச்சாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.